Ultimatestar Ajithkumar Fans Club


*** Welcoming you all ***


Stay tuned for all latest updates


Thank You !!!! Visit Again !!!!!!!


Monday, January 22, 2007

Rasigan Kural



இப்போதெல்லாம் தமிழ் சினிமா படத்துக்காக இல்லாமல், அந்த படத்தில் நடித்த நடிகருக்காகவும், அதற்கு தரப்படுகிற விளம்பரத்துக்காகவும் தான் ஓடுகிறது.. அந்த படத்திற்காக செலவு செய்த, உழைக்கின்ற பலபேரை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. முதலில் நான் இப்படி சொல்வதற்கு சில எடுத்துக்காட்டுகள்..

தீபாவளிக்கு அஜித்தின் வரலாறு வெளிவந்தது. அதற்கு உலக தொலைக்கட்சியில் முதன் முறையாக என்று மார்தட்டி நிகழ்ச்சிகள் நடத்தும் சன் தொலைக்கட்சி கடைசி வரை வல்லவனை முதலிடத்திலும் வரலாறை இரண்டாம் இடத்திலும் வைத்தது. போன வருடம் 2006-இன் அதிக வசூலை குவித்தது என்று இந்தியா டுடே நாளிதழும் விநியோகஸ்தர்களும் சொன்ன ஒரு படம், சன் தொலைக்காட்சியில் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுகிறது.. இது நியாயமா.. இதே, சன் டிவியை தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர்கள் விநியோகஸ்தர்கள் தொடர்பு கொண்ட படமாய் இருந்தால், அது எப்பேர்ப்பட்ட படமாய் இருந்தாலும் முதலிடம் தான்.. அது தெலுங்கு படத்தை அப்படியே அச்சு அசலாக நகலெடுத்த இளையதளபதி விXXX படமாக இருந்தாலும் சரி, ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் படமாக இருந்தாலும் சரி, சர் சரென்று கைகளால் கபடி விளையாடி நடிக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் படமாக இருந்தாலும் சரி.. முதலிடம் தான்.. ஏகபோக பாராட்டுக்கள் தான்.. இது தான் நடுநிலைமை தவறாமல் நடத்தப்படும் நிகழ்ச்சியா..இது மட்டுமல்ல, மாதம் இரண்டு முறை படித்துவிட்டீர்களா குங்குமம் புத்தகத்தில் தும்மினால் கூட போட்டு விளம்பரங்கள் செய்வதுவும் நடக்கிறது. இதெல்லாம் செய்வது தவறில்லை. ஆனால் இவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வராத நடிகர்கள், இயக்குநர்கள் பற்றி அவர்கள் எழுதியது தன் செய்திகள், அவர்களின் செய்தி தரும் ஊடகங்களில்..இதற்கு அடுத்து நெட்டில் புகழ் பரப்பும் நம்ம சிஃபி இணையதளம். வரலாறை வெற்றி என்று அறிவிக்க அவர்களுக்கு மூன்று வாரங்கள் தேவைப்பட்டது. ஆனால் போக்கிரியை மூன்று நாட்களில் வெற்றி என்று பறைசாற்றி இருக்கிறார்கள். வரலாறைவிட குறைந்த லாபமே ஈட்டிய வேட்டையாடு விளையாடு கடைசியில் பிளாக்பஸ்டர் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி வரை வரலாறு சூப்பர் ஹிட்டாகவே இருந்தது.இப்போது தான் ஆழ்வார் படம் பார்த்தேன். இ-மெயில்களிலும் வார்த்தை வழிகளிலும் சொல்லப்படுகின்ற மாதிரி..இல்லை இல்லை.. பரப்பப்படுகின்ற அளவு படம் மோசம் இல்லை. முதல் முறை இயக்குவதால் இயக்குநர் செல்லா சில தவுறுகளை செய்திருக்கிறார். ஆனால் எல்லோரும் சொல்வது போல் இல்லை. அஜித் இது போன்று புது இயக்குநர்களுக்கு ஆதரவு தந்தது போன்று வேறு யாராவது தந்திருக்கிறார்களா என்று சொல்லுங்கள்.. கிட்டதட்ட பதினெட்டு படங்கள் அஜித்திற்கு புது இயக்குநர்கள் இயக்கியது தான். சும்மா அடுத்தவர் ஜெயித்ததிலே, அவர்களை நகலெடுத்து நடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தன்னை போன்றே வெற்றி பெற துடிக்கும் பல பேருக்கு வாய்ப்பு தந்தவர் அஜித். எஸ்.ஜே.சூர்யா முதல் ஏ.ஆர்.முருகதாஸ் வரை புதுமுகங்கள் தான், அவர்கள் முதல் படங்களை எடுக்கும் போது. இவர்களை எல்லாம் நம்பிக்கையோடு அரவணைத்திருக்காவிட்டால் இவர்கள் இன்று முகம் காட்டியிருக்க முடியுமா? அப்படி கொடுத்தது தான் செல்லாவுக்கும் வாய்ப்பு. அந்த வாய்ப்பையும் அவர் சரியாகத் தான் பயன்படுத்தி இருக்கிறார். (படத்தின் விமர்சனம் தனியாக)எனது ஊர் நண்பர்களுக்கு போன் செய்து கேட்டபோது, பொங்கலன்று, போக்கிரி சரியில்லை என்றார்கள். ஆழ்வார் நன்றாக இருக்கிறது என்றார்கள்.. மற்ற எல்லா நண்பர்களும் போக்கிரி விமர்சனத்தில் குறியிருப்பது போல், தெலுங்கு போக்கிரி படத்தை மட்டுமல்ல, அதன் நாயகனின் நடை உடை பாவனையையும் அப்படியே காப்பி அடித்திருக்கிறார்களாம்.. நான் மற்றவர்களை குறை சொல்லவில்லை. ஆனால் இப்படி தனியாக எந்த விளம்பரங்களும் இல்லாமல் முன்னேறும் ஒருவருக்கு இப்படியா வதந்திகள் மூலம் படத்தை ஓடவிடாமல் செய்வது.இதற்கு மேல் வாதம் செய்தால் அது ஏதோ தனிமனித துவேஷம் ஆகிவிடும். விமர்சனம் எழுதும் நண்பர்களே, உண்மையை எழுதுங்கள். உங்கள் நடைக்கேற்ப சுவைபட எழுதுங்கள். ஆனால் உன்மையை எழுதுங்கள்.நான் அஜித்தின் ரசிகன் என்பது உலககுக்கே தெரியும். அதனால் தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன் என்று நினைக்காதீர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரையும் கேட்டால் அஜித்தின் தன்னம்பிக்கையும், அவருக்கும் மட்டும் ஏனிப்படி நடக்கிறது என்ற கவலையும் உண்டு. எனக்கும் தான். நிச்சயம் விரைவில் தலை நிமிர்ந்து நிற்பார். அவரை பாக்க எல்லோரும் கழுத்து சுளுக்கி பாக்காணும். இது ஏதோ எப்பவும் பேசும் வசனங்கள் இல்லை. ஒரு நம்பிக்கை.

No comments: