ஒரு "தல வரலாறு"அஜித்
ஒரு ஆச்சர்யமாண வரலாறுதான்.வாழ்க்கையில் போராடியவர்கள் ஏராளம்.ஆணால் போராட்டத்தையே வழ்க்கையாக ஏற்பதற்கு எத்தனைபேருக்கு தைரியம் வரும்! அஜித் போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்.அடுத்தவன் பணத்தில்,அடுத்தவன் திறமையில், "வடுமாங்கா ஊறுதுங்கோ"ன்னு சதை மாங்கா விற்கும் பெண்னை காட்டி பெற்ற வெற்றியை அனுபவிப்பதற்கு பெரியதிறமை தேவையில்லை.ஆனால் புதிய முயற்சியின் விழைவாய் வரும் தோல்வியை தாங்க தைரியம் ரொம்ப வேனும்.அது அஜித்திடம் நிறையவே இருக்கு.அஜித்! அடுத்தவர் பணத்தில்,அப்பன் புகழில்,நடிகைகளின் சதையை "கதை"யாய்பயன்படுத்தி குடும்பமே சேர்ந்துகுட்டிகர்ணம் போட்டு முண்ணேறிவந்தவரல்ல,ஏற்றுக்கொண்ட தொழிலில் எட்டாத உயரத்தை அடையவேண்டும் என்ற தீராத தாகம்,முயற்சி, தமிழக திரை ரசிகர்களின் எடைதராசுக்குஏற்றதாய் இல்லாமல் சில தோல்விகளை தந்திருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் உறுதி,மூண்று படங்கள் ஊத்திக்கொண்டாலே மூக்கால் அழும் முச்சந்திபேர்வழி அல்ல!பீனிக்ஷ் பறவையாய்,பேரலையாய்புறப்படும் போர்க்குணம் உடையவர் அஜித். அவர் படம் எப்படி போகிறது (ஆழ்வார் உட்பட) என்பது முக்கியம் அல்ல.ஆனால் அவர் வழ்க்கை நிச்சயம் முயற்சியாளர்களுக்கு,போராட்டவாதிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு "தல வரலாறு" வாக அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment